ஊடரங்கு கட்டுப்பாடுகளால், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாதிக்கப்படக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் மனோகரன், மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டு 3 மாதங்கள் நிறைவடைந்துள்ளதாகவும், இதுவரை 12 கோடியே 26 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தாலும், கொரோனா தடுப்பூசி மையத்திற்கு மக்கள் சென்று வருவதற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் இருந்து தொற்று பரவாமல் இருக்க, மருத்துவமனையின் தனி கட்டடத்தில் தடுப்பூசி மையம் இருக்க வேண்டும் என்றும், அதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்