Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!

நடப்பு ஐபிஎல் சீசனின் பன்னிரண்டாவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. மும்பை - வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சை தேர்வு செய்திருந்தார். அதனால் முதலில் பேட் செய்த சென்னை அணி இருபது ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களை குவிந்திருந்தது.

Innings Break!#CSK post a total of 188/9 after 20 overs.#RR chase coming up shortly. Stay tuned!

Scorecard - https://t.co/vRHaGGSTjJ #CSKvRR #VIVOIPL pic.twitter.com/USAhI714yl
— IndianPremierLeague (@IPL) April 19, 2021

189 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு ஜாஸ் பட்லர் மற்றும் மனன் வோஹ்ரா இன்னிங்ஸை தொடங்கியிருந்தனர். 14 ரன்கள் எடுத்த நிலையில் சாம் கரன் வேகத்தில் விக்கெட்டை இழந்தார் வோஹ்ரா. அந்த அணியின் கேப்டன் சாம்சனும் 5 பந்துகளில் வெறும் 1 ரன்னை மட்டுமே எடுத்து அவுட்டானார். அவரையும் சாம் கரன் வீழ்த்தி இருந்தார்.
தூபேவுடன் இணைந்து 42 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் பட்லர். 35 பந்துகளில் 49 ரன்களை குவித்திருந்த பட்லர், ஜடேஜா சுழலில் ஆட்டத்தின் பன்னிரண்டாவது ஓவரில் விக்கெட்டை இழந்தார். அதே ஓவரில் தூபேவும் LBW முறையில் விக்கெட்டை இழந்தார். அது ஆட்டத்திலேயே பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அதற்கடுத்த ஓவரில் பந்து வீச வந்த மொயின் அலி தனது முதல் ஓவரிலேயே பார்மில் உள்ள டேவிட் மில்லரும் விக்கெட்டை இழந்தார். மீண்டும் பதினைந்தாவது ஓவரில் ரியான் பராக் மற்றும் கிறிஸ் மோரிஸை வீழ்த்தி இருந்தார் மொயின் அலி.

Huge moment in the game!@imjadeja bamboozles Buttler who departs one short of his fifty.

Live - https://t.co/vRHaGGSTjJ #CSKvRR #VIVOIPL pic.twitter.com/NdIt0bB48f
— IndianPremierLeague (@IPL) April 19, 2021

தெவாட்டியா 15 பந்துகளில் 20 ரன்களை குவித்து பிராவோ பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தார். உனத்கட் 16 பந்துகளில் 24 ரன்களை குவித்து வெளியேறினார். அவரது விக்கெட்டை தாக்கூர் வீழ்த்தி இருந்தார். இருபது ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை குவித்தது ராஜஸ்தான்.

#RR's middle order continue to crumble! Two wickets in an over for Moeen Ali.

Riyan Parag and Chris Morris depart.

Live - https://t.co/egRsiJBmAL #CSKvRR #VIVOIPL pic.twitter.com/quehCFliug
— IndianPremierLeague (@IPL) April 19, 2021

அதன் மூலம் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி நடப்பு சீசனில் மூன்று போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இந்த ஆட்டத்தில் ஜடேஜா 4 கேட்ச்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

கருத்துரையிடுக

0 கருத்துகள்