Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் வாயுக்கசிவு: உயிரிழப்பு 22 ஆக அதிகரிப்பு

மகாராஷ்டிராவில் ஆக்சிஜன் வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக், ஜாகிர் உசேன் மருத்துவமனையில் டேங்கரில் இருந்து சிலிண்டருக்கு ஆக்ஸிஜன் மாற்றும் பணி நடைபெற்றது. அப்போது வாயுக்கசிவு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் தற்போது உயிரிழந்தோரின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து நாசிக் மாவட்ட ஆட்சியர் சூரஜ் மந்தாரே கூறுகையில், “22 பேர் உயிர் இழந்துள்ளனர். தற்போது வரை நோயாளிகள் ஆக்ஸிஜனை முறையாகப் பெறுகின்றனர்” எனத் தெரிவித்தார்.

image

மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோப் கூறுகையில், ஆக்ஸிஜன் வாயுக்கசிவை கட்டுப்படுத்த தீயணைப்பு துறை வீரர்கள் போராடி வருவதாகவும் கசிவு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், விசாரணை முடிந்ததும் நாங்கள் முழு தகவலை வெளியிடுவோம் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைச்சர் டாக்டர் ராஜேந்திர ஷிங்கானே இந்த சம்பவம் "துரதிர்ஷ்டவசமானது" என்று குறிப்பிட்டார். மேலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “விபத்து செய்தியைக் கேட்டு மன உளைச்சலுக்கு ஆளானேன். இந்த சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்