கொரோனா தொற்றால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் முதல் பிசிசிஐயின் அறிவிப்பு வரை என இன்றைய முக்கியச்செய்திகள்
* கொரோனாவை வெற்றிகொள்ள இந்தியாவிற்கு அமெரிக்கா துணை நிற்கும் என பிரதமர் மோடியிடம் அதிபர் ஜோ பைடன் உறுதி. மருந்துகள், தடுப்பூசி மூலப்பொருட்கள் விரைந்து அனுப்பப்படும் என்றும் தொலைபேசி மூலம் தகவல்.
* வீட்டில் இருப்போரும் முகக்கவசம் அணிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல். மாதவிடாய் காலத்திலும் தயங்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தல்.
* மே 01 மற்றும், 02 தேதிகளில் தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை. ஊரடங்கு குறித்த அறிவிப்பை நாளைக்குள் தமிழக அரசு வெளியிடலாம் என்றும் யோசனை.
* தமிழகத்தில் சனிக்கிழமையும் இறைச்சிக் கடைகளை மூட அரசு உத்தரவு. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், அதற்கு முந்தையநாளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க நடவடிக்கை.
* ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை. ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக மட்டும் ஆலையை 4 மாதங்கள் திறக்க அனுமதிக்கலாம் என அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்.
• ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட்டை திறக்க போராட்டக்குழுவினர் எதிர்ப்பு. தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம்.
• திமுக ஆட்சி அமைந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலை எந்த சூழலிலும் திறக்கப்படாது என மு.க.ஸ்டாலின் உறுதி. மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்காக அனுமதி வழங்கும் முடிவு தற்காலிகமானதுதான் என்றும் விளக்கம்.
• தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஒரேநாளில் 94 பேர் உயிரிழப்பு. இணைநோய் எதுவும் இல்லாத 14 பேர் உயிரிழந்த பரிதாபம்.
• கொரோனா தடுப்பு ஏற்பாடுகள் முறையாக இல்லையென்றால் வாக்கு எண்ணிக்கைக்கு தடைவிதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் எச்சரிக்கை. கொரோனாவால் ஏற்படும் இறப்புக்கு தேர்தல் ஆணையத்தின் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என்றும் கருத்து.
• மத்திய அரசே கொரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வழங்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.
• செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அருகே அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்து. மூன்று பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்த சோகம்.
• ராணிப்பேட்டை அருகே மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டு. காவல் மற்றும் வருவாய்த் துறையை சேர்ந்த 19 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.
• ஐபிஎல் கிரிக்கெட் தொடர் திட்டமிட்டபடி தொடர்ந்து நடைபெறும் என பிசிசிஐ அறிவிப்பு. கொரோனா அச்சத்தால் சில வீரர்கள் விலகிய நிலையில் விளக்கம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்