Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆந்திரா: மருத்துவமனையில் படுக்கை இல்லை; ஆம்புலன்ஸிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை , மருத்துவமனையில் படுக்கை கிடைக்காமல் ஆம்புலன்சிலேயே உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அச்சுதாபுரத்தை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை ஜான்விதாவுக்கு ஒரு வாரமாக சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து பெற்றோர் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் குழந்தையை சேர்த்துக்கொள்ள தனியார் மருத்துவமனை மறுத்து விட்டது. சந்தேகத்தின் பேரில் குழந்தை ஜான்விதாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது, தொற்று இருப்பது உறுதியானது.

இதையடுத்து விசாகப்பட்டினம் கே.ஜி.எச். அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் குழந்தையை அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகள் அனைத்தும் நிரம்பியதால் படுக்கைக்காக குழந்தை ஆம்புலன்சிலேயே காத்திருந்தது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் காத்திருந்த குழந்தை ஆம்புலன்சிலேயே உயிரிழந்தது.

image

குழந்தையை எப்படியாவது காப்பாற்றி விடலாம் என மருத்துவமனை முன்பு காத்திருந்த ஜான்விதாவின் பெற்றோர் கண்ணீருடன் கதறிய காட்சி காண்போரையும் கலங்க செய்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்து வரும் நிலையில், வருமுன் காப்போம் என்பது மட்டுமே தற்போது நமக்கு இருக்கும் ஒரே வழி.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்