`இந்தியாவை போல, உலகின் வேறு எந்த நாட்டில் வேண்டுமானாலும் கொரோனாவால் பேரலையாக உருவாகி, மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம்’ என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘கொரோனா போன்ற உலகளாவிய பெருந்தொற்றை சமாளிக்க தனிப்பட்ட நபர்கள் தொடங்கி சுகாதாரத்துறை அதிகாரிகள் வரை, அனைவருமே இணைந்து இணக்கமாக, சமூக பொறுப்புணர்ந்து செயல்பட்டால் மட்டுமே, கொரோனாவை கடக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும்’ என குறிப்பிட்டுள்ளார்கள் அவர்கள்.
மேலும், ‘1.3 கோடி மக்கள் இருக்கும் இந்தியாவில் இந்தளவுக்கு கொரோனா பரவியதற்கான காரணம், அங்கு பொதுமுடக்கம் அமலில் இல்லாமல், அளவுக்கதிகமான தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதும், அதன் தொடர்ச்சியாக விளையாட்டு போட்டிகள், திருமண விசேஷங்கள், விழாக்கள் போன்றவற்றில் மக்கள் கூட்டம் கூடியதும்தான்’ என்று அவர்கள் இந்தியாவில் கொரோனா பரவியதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளனர். மேலும் இவையாவும், தடுப்பூசி விநியோகத்தை அதிகப்படுத்துவதற்கு முன்னரே செய்யப்பட்டது, மிகப்பெரிய தவறென சுட்டிக்காட்டுகிறார்கள் அவர்கள். உலக நாடுகள் எதுவும், தடுப்பூசியை அதிகரிக்காமல் பொதுமுடக்கத்தில் தளர்வுகளை அதிகபட்சமாக கொண்டுவராமல் இருக்குமாறு அறிவுறுத்தியும் உள்ளனர்.
தடுப்பூசியை பொறுத்தவரை, ஐரோப்பாவில் கடந்த சில மாதங்களாக தடுப்பூசி விநியோகம் ஓரளவு வேகமாக இருக்கிறதென தரவுகள் சொல்கின்றன. இதை உறுதிபடுத்தும் வகையில், ஐரோப்பாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களைவிடவும், தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்கள் அதிகம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி விநியோகத்தில் இது, ஆரோக்கியமான தொடக்கமாக எனக்கூறி பாராட்டும் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி மட்டுமே, இப்போதைக்கு நம்மிடம் இருக்கும் பேராயுதம்!
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்