Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மே 2-ல் ஊர்வலம் செல்லவும், பட்டாசு வெடிக்கவும் தடை - சென்னை உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஊர்வலம் செல்லவும் பட்டாசு வெடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறும் போது, “ வாக்கு எண்ணிக்கை மற்றும் வெற்றியின் போது தொண்டர்களை தலைவர்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். மே 2ம் தேதி பட்டாசுகள் வெடிக்க கூடாது, வெற்றிக் கொண்டாட்டங்கள், ஊர்வலம் கூடாது. அந்த நடைமுறையில் அரசியல் கட்சிகள் சிறந்த நடவடிக்கைகள் எடுத்து தலைவர்கள் முன்னுதாரனமாக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் செய்துள்ள நடவடிக்கைகள் திருப்தியளிக்கின்றன.

image

எப்போது ரெம்டெசிவிர் மருந்து கிடைக்கும்?

மத்திய அரசிடம் இருந்து 2 1/2  லட்சம் தடுப்பூசிகளை கேட்டோம். ஆனால் தற்போது வரை அதில் 25 சதவீத மருந்துகள் மட்டுமே கிடைத்துள்ளதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறிய நிலையில், மீதம் கேட்ட தடுப்பூசி மற்றும் மருந்துகள் எப்போது மாநில அரசுக்கு கொடுக்கப்படும் உள்ளிட்ட விவரங்களை மே 5 ஆம் தேதி தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக, போக்குவரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கரூர் தொகுதியில் கூடுதல் வாக்கு எண்ணிக்கை இடங்களை உருவாக்க வேண்டும் என்று கோரிய வழக்கும், கொரோனா தடுப்பு மருந்துகள் தமிழகம் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு எவ்வாறு கிடைக்கிறது, அதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்னென்ன என்பது தொடர்பான வழக்கையும் ஒன்றே சேர்த்து விசாரித்த நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்