நாட்டிலுள்ள ஆக்ஸிஜன் தொழிற்சாலைகளை ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைக்கவேண்டும் என டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டிலேயே கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் ஒன்றான டெல்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு வெகுவாக உள்ளது. இன்னும் சில மணிநேரங்களுக்குத்தான் ஆக்ஸிஜன் இருக்கும் என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நோயாளிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என மருத்துவமனைகள் தொடர்ந்து கோரிக்கைகளை விடுத்துவருகின்றன.
இந்த சூழ்நிலையில், டெல்லிக்கு வரும் ஆக்ஸிஜன்களை மற்ற மாநிலங்கள் தடுத்துநிறுத்துவதாகக் கூறப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியுடனான காணொலி ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லி முதல்வர் இக்கோரிக்கையை விடுத்துள்ளார்.
கெஜ்ரிவால் பேசுகையில், நாட்டிலுள்ள அனைத்து ஆக்ஸிஜன் தயாரிப்பு ஆலைகளையும் ராணுவத்தின் பொறுப்பில் ஒப்படைக்கவேண்டும் எனவும், டெல்லிக்கு ஆக்ஸிஜன் ஏற்றிவந்த வாகனங்களை பல மாநிலங்கள் தடுத்து நிறுத்தியதால அதற்கு தீர்வு தேவை எனவும், எனவே ராணுவ பாதுகாப்புடன் டெல்லியிலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஆக்ஸிஜன் அளிக்கவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
"Sir, need your guidance": Delhi CM Arvind Kejriwal to PM Modi on #OxygenShortage pic.twitter.com/qbny5GS3V3
— NDTV (@ndtv) April 23, 2021
மேலும் தடுப்பூசியைப் பொறுத்தவரை மத்திய அரசுக்குக் கிடைக்கும அதேவிலையில் மாநில அரசுகளுக்கும் கிடைக்க வழிவகை செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்