Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"கொல்கத்தாவில் பரப்புரை இல்லை"-மம்தா பானர்ஜி திடீர் முடிவு!

கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக கொல்கத்தா நகரில் தேர்தல் பரப்புரையை மம்தா பானர்ஜி மேற்கொள்ளப்பட்டார் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், இதுவரை 5 கட்டத் தேர்தல் நிறைவடைந்துள்ளது. எஞ்சிய மூன்று கட்டங்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அனைத்து கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளையில் மேற்கு வங்கத்தில் கொரோனா தொற்றும் அதிகரித்து வருகிறது. பிரம்மாண்ட தேர்தல் பரப்புரையால் கொரோனா தொற்று அதிகரிப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இனி தாம் மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபடப்போவதில்லை என தெரிவித்து, தன்னுடைய அனைத்து நிகழ்ச்சியையும் ரத்து செய்தார். இந்நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ ப்ரைன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் இனியும் பரப்புரையில் ஈடுபடமாட்டார். இறுதியாக ஏப்ரல் 26 ஆம் தேதியில் மட்டும் சம்பிரதாய முறையில் பங்கேற்பார். மேலும் தன்னுடைய அனைத்து மாவட்ட தேர்தல் பரப்புரையையும் 30 நிமிஷம் குறைத்துள்ளார்" என பதிவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்