சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. நாளை காலை 9.15 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்க அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் அதிக அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நொயாளிகளை காப்பாற்றத் தேவையான ஆக்சிஜன் இல்லாமல் மாநில அரசுகள் மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தமிழக அரசே ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. அது தொடர்பாக ஆலோசனை பெற அனைத்துக் கட்சி கூட்டத்தை முதல்வர் கூட்டியுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்