Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மருத்துவ ஆக்சிஜன் தேவைக்காக கார் உற்பத்தியை நிறுத்தும் மாருதி!

நாட்டின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி, மருத்துவ ஆக்சிஜன் தேவைக்காக கார் தயாரிப்பை நிறுத்த முடிவு செய்திருக்கிறது. ஹரியானா மற்றும் குஜராத்தில் உள்ள ஆலைகளை மூடுவதாக பங்குச்சந்தைக்கு கடிதம் மூலம் மாருதி தெரிவித்திருக்கிறது.

இந்தியா முழுக்க, கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மிக மோசமாக இருக்கிறது. இதில், மருத்துவ ஆக்சிஜன் தட்டுப்பாடு உச்சத்தை அடைந்திருக்கிறது. பல தனியார் நிறுவனங்கள், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றன. அப்படித்தான், மாருதி நிறுவனமும் இப்போது முன்வந்துள்ளது.

பொதுவாக, கார் தயாரிப்புக்கு சிறிதளவுக்கு ஆக்சிஜன் தேவைப்படும். அதேபோல வண்டியின் உதிரி பாகங்கள் தயாரிப்புக்கும் ஆக்சிஜன் தேவைப்படும். `இந்த பேரிடர் காலத்தில் சந்தையில் இருக்கும் ஆக்சிஜனை, கார்கள் தயாரிக்க பயன்படுத்தாமல், மனித உயிர்களை காப்பதற்கு பயன்படுத்த நினைக்கிறோம். அதற்காகவே இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறோம்' என மாருதி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

image

முன்னராக, தங்கள் நிறுவனத்தின் ஆலை பராமரிப்புக்கு ஜூன் மாதத்தில், உற்பத்தியை நிறுத்த மாருதி நிறுவனம் முடிவெடுத்திருந்தது. இந்த பணியை, ஒரு மாதம் முன்னதாகவே, மே மாதம் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம் என மாருதி நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இந்த தேதியில், தங்கள் ஆலையும் செயல்படாது என மாருதி அறிவித்திருக்கிறது.

மாருதியை போல, ஹூண்டாய் நிறுவனமும் 20 கோடி ரூபாயை கோவிட் நிதியாக ஒதுக்கி இருக்கிறது. இந்த நிதியை தமிழ்நாடு, தெலங்கானா, டெல்லி, ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த செலவு செய்யப்படும் என ஹூண்டாய் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்