கர்நாடக மாநிலத்தில் அமலில் உள்ள ஊரடங்கு எதிரொலியாக கூடலூர் வழியாக நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளாவிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக திரும்பி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ள நிலையில் இன்று மாலை முதல் வரும் மே 10ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. இதனிடையே கர்நாடக மாநிலத்தில் வேலைக்கு சென்று தங்கியிருந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் இன்று அதிகாலை முதலே கூடலூர் வழியாக தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பத் துவங்கியிருக்கிறார்கள்.
நீலகிரி மாவட்ட, தமிழக கர்நாடக எல்லையில் உள்ள கக்கநல்லா சோதனைச்சாவடி வழியாக நூற்றுக்கணக்கான வாகனங்களில் நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளாவை சேர்ந்தவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அதேபோல ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் தங்கியுள்ள கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்