Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கேரளா: நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரகாஷ் மாரடைப்பால் மரணம்

கேரளா மாநிலம் நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் வி.வி.பிரகாஷ் மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 56. 

கேரள மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்று முடிந்தது. வாக்கு எண்ணிக்கை வரும் மே 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மலப்புரம் மாவட்டத்திலுள்ள நிலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில், ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில், மாவட்ட காங்கிரஸ் தலைவர் வி.வி.பிரகாஷ் போட்டியிருந்தார். அவரது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை அவர் திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். பிரகாஷின் திடீர் மறைவு, கட்சி வட்டாரத்திலும் தொகுதி மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

image

குன்னுமேல் கிருஷ்ணன் நாயர் மற்றும் சரோஜினி அம்மா ஆகியோரின் மகனான வி.வி.பிரகாஷ் எடக்காராவில் பிறந்தார். தனது கல்லூரி நாட்களில் கேரள மாணவர் ஒன்றியத்தில் (KSU) உறுப்பினராக இருந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். மலப்புரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து வந்தார். நடைபெற்று முடிந்த தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பாக போட்டியிட்ட வி.வி.பிரகாஷுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருத்துக்கணிப்புகள் கூறிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்