Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

போக்குவரத்து போலீசாரின் தடுப்பூசி முகாமிலேயே காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகள்! https://ift.tt/3ae8H4D

சென்னையில் போக்குவரத்து போலீசாரின் தடுப்பூசி முகாமிலேயே கொரோனா விதிமுறைகள் காற்றில் பறந்ததும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், உயரதிகாரியின் கண்டிப்புக்குப் பிறகு இந்த நிலை சீரானது.

கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை சென்னையில் உச்சக்கட்டத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்கவும், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படியும் அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் பொதுமக்களில் பலர் அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றாததாலேயே கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே சென்று கொண்டிருக்கிறது.

முன்களப் பணியாளர்களாக செயல்பட்டு வரும் காவல்துறையினர், பொதுமக்களிடையே கொரோனா தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், தங்களை காத்துக்கொள்வதற்காக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் செய்து வருகின்றனர்.

சென்னைப் போக்குவரத்து போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்காக இன்று காலை சென்னை காவல்துறை மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டு அழைப்பு விடுத்தனர். தடுப்பூசி போடும் முகாமை சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி தொடங்கிவைத்து பார்வையிட்டார்.

image

அப்போது, தடுப்பூசி போடவந்த காவல்துறையினரிடையே எந்தவித தனிமனித இடைவெளியும் பின்பற்றப்படவில்லை. கூட்டாமாக இருந்ததை கண்டு கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி கண்டித்து, ஒழுங்காக விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனக்கூறி காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பிறகுதான் ஒழுங்காக வரிசைபடுத்தினர்.

பிற அரசு மருத்துவமனைகளிலும் தடுப்பூசி செலுத்துக்கொள்ளும் வசதிகள் இருந்தாலும், இங்கு காவலர்களுக்கென பிரத்யேகமாக தடுப்பூசி செலுத்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் பெரும்பாலான காவலர்கள் இங்கே தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நீண்ட வரிசையில் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள காத்திருக்கும் காவலர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் கூட்டமாக நிற்பதும், முகக்கவசங்களை அரைகுறையாக அணிவதுமாக பாதுகாப்பற்ற ஒரு சூழலே தடுப்பூசி போடும் இடத்தில் காணப்பட்டது.

image

கொரோனா பெருந்தொற்று காலத்தில் முகக்கவசம் அணிதல் குறித்தும், தனிமனித இடைவெளி குறித்தும் பொதுமக்களுக்கு அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் காவல்துறையிலேயே இதுபோன்று நிகழ்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறையினருக்கென பிரத்யேகமாக இந்த ஓர் இடமே தடுப்பூசி செலுத்த அமைக்கப்பட்டுள்ளதால்தான் இந்த நெருக்கடி சூழல் உருவாகியுள்ளதாகவும், உயர் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி காவலர்கள் தடுப்பூசி செலுத்துக்கொள்ள மையங்களை அதிகரிக்க வேண்டும் எனவும் சில காவலர்கள் கருத்து தெரிவித்தனர்.

- சுப்ரமணியன் | படங்கள்: கிருஷ்ணமூர்த்தி

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்