Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மேற்கு வங்கம், அசாமில் மூன்றாம் கட்ட தேர்தல்: மக்கள் ஆர்வமுடன் வாக்களிப்பு https://ift.tt/3dEm8f8

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும், அசாம் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிகட்ட வாக்குப்பதிவும் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

மேற்கு வங்கம் மாநிலத்தில் மொத்தம் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே இரு கட்டங்களாக 60 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. 31 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

சுமார் 78.5 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தம் 205 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனர். மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி இடையே மும்முனைப் போட்டி காணப்படுகிறது. திரிணாமூல் - பாஜக இடையே ஆட்சியைப் பிடிப்பதற்குக் கடும் போட்டி நிலவுகிறது. மேற்கு வங்கத்தில் வரும் 10, 17, 22, 26, 29 ஆகிய தேதிகளில் அடுத்தக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

image

அசாம் மாநிலத்தில் 40 தொகுதிகளுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 86 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வக்குப்பதிவு நடைபெற்றது. மூன்றாம் கட்டத்தில் 337 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் சுமாா் 79.19 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். வன்முறைகளைத் தடுக்கும் நோக்கில் 320 பாதுகாப்புப் படைக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைப்பற்கு பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டில் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்கு காங்கிரஸ் முயற்சித்து வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்