Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு? https://ift.tt/3uOSwTm

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் டெல்லியில் வார இறுதியில் ஊரடங்கை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் தற்போது கொரோனா நான்காவது அலையை சந்தித்து வருகிறது. டெல்லியில் நேற்று முன் தினம் 13,468 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மேலும், 81 பேர் உயிரிழந்தனர். அதேபோல் டெல்லியில் நேற்று மட்டும் புதிதாக 17,282 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கொரோனா தொடங்கியதிலிருந்து அதிகபட்ச ஒற்றை நாள் எண்ணிக்கை ஆகும். மேலும், 104 பேர் கொரோனாவால் இறந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 11,540 ஆக உயர்ந்துள்ளது.

No-plan-to-implement-full-time-curfew-in-Delhi-Arvind-Kejriwal

இதனால் டெல்லியில் நாளுக்கு நாள் கொரோன பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருவதுடன் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதனிடையே பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முழு நேர ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை எனவும் தடுப்பூசியை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் வார இறுதியில் ஊரடங்கை அமல்படுத்த டெல்லி அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று துணைநிலை ஆளுநர் அனில் பைஜலுடனான சந்திப்பின்போது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்க முன்மொழிந்ததாக கூறப்படுகிறது.

வைரஸ் பரவுவதைத் தடுக்க தேசிய தலைநகரில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஏழு மணி நேர இரவு ஊரடங்கு உத்தரவை மாநில அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்