Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

செப்டம்பருக்குள் 10 கோடி கோவாக்சின் தடுப்பூசி; உற்பத்தி நிறுவனங்களுக்கு சிறப்பு நிதி

கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தியை செப்டம்பர் மாதத்திற்குள் 10 கோடி அளவுக்கு அதிகரிக்க பாரத் பயோடெக் உள்ளிட்ட மூன்று நிறுவனங்களுக்கு சிறப்பு நிதியுதவி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோய் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசிக்கான தேவையும் உயர்ந்து கொண்டே வருகிறது. எனவே, பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக், மும்பையில் இயங்கி வரும் ஹெப்கின் பயோ ஃபார்மாசூடிக்கல்ஸ், ஹைதராபாத்தில் உள்ள இந்தியன் இமியூனாலிஜிக்கல் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களுக்கு சிறப்பு நிதி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மூன்று நிறுவனங்களுக்கும் தலா 60 முதல் 65 கோடி ரூபாய் வரை வழங்கி செப்டம்பர் மாதத்திற்குள் 10 கோடி தடுப்பூசிகளை தயாரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணியித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்