வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் எனவும், ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருச்சி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை 2 இல் இருந்து 4 டிகிரி வரை உயரக்கூடும் எனவும், மத்திய வங்கக்கடலில் புயல் உருவாவதால் தமிழகத்தில் தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் வறண்ட வானிலை நிலவும் என தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம், ஆந்திரா, மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுவரை பெய்த மழையில், சேத்தியாத்தோப்பு -10 செ.மீ, மூங்கில் துறைப்பட்டு - 9 செ.மீ, கேசிஎஸ் மில் - 8 செ.மீ, தியாகத்துருகன் - 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்