Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மே 18 முதல் தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் விற்பனை: தமிழக அரசு

நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் இன்று நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில் வருகிற 18ஆம் தேதிமுதல், தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்யப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் மருத்துவமனைகள் தங்கள் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் விவரங்களோடு, மருத்துவ தேவைக்குறித்த விவரங்களை இணையத்தில் பதிவுசெய்யும் வசதி ஏற்படுத்தப்படும். மருத்துவமனைகளின் கோரிக்கைகள் பரிசீலணை செய்யப்பட்டபிறகு, அந்தந்த மருத்துவமனைகளுக்கான மருத்துவ பிரதிநிதிகள் மட்டும் அவர்களுக்கான விற்பனை மையங்களுக்குச் சென்று, அந்தந்த மருத்துவமனைக்கென்று ஒதுக்கீடு செய்யப்பட்ட மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும், இதற்கான இணையதளம் குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

image

தமிழகத்தில் மட்டுமே நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினரிடம் ரெம்டெசிவிர் மருந்து வழங்கப்பட்டு வருகிறது. ரெம்டெசிவிர் மருந்து விற்கும் இடங்களில் கூட்டம் கூடுவதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. எனவே தேவையான நோயாளிகளுக்கு மருந்து சென்றடையவும், கள்ளச்சந்தைகளில் மருந்து விற்பனை தடுக்கப்பட்டு உரிய விலையில் நோயாளிகளுக்கு சென்றடைவதை மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தேவையற்ற மருந்துசீட்டை அளிப்போர்மீதும், விதிமுறைகளை மீறுவோர்மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்