பவானிசாகர் தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றது. 99,181 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் பண்ணாரி வெற்றி பெற்றுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் சுந்தரம் 83,173 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளது.
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் சுமார் 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாமக வேட்பாளர் கஸ்ஸாலி 17,062 வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.
கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் 91,755 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
குன்னூரில் திமுக வேட்பாளர் ராமச்சந்திரன் 4,105 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
தாராபுரம் தொகுதியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்த பாஜக வேட்பாளர் எல்.முருகன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அதிமுக வேட்பாளர் அமுல் கந்தசாமி வெற்றி பெற்றார்.
காட்பாடி தொகுதியில் தொடர்ந்து பின்னடைவில் இருந்த திமுக வேட்பாளர் துரைமுருகன் தற்போது முன்னிலை வகித்து வருகிறார்.
அரக்கோணம் தொகுதியில் 28,054 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் சு.ரவி வெற்றி பெற்றார். விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் கவுதம் சன்னா 57,345 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்துள்ளார்.
பன்ரூட்டியில் தொடர்ந்து பின்னடைவில் இருந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகன் தற்போது முன்னிலை வகித்து வருகிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்