”திமுக கூட்டணி வெற்றிமுகம். வெற்றியைக் கொண்டாடுவதென வீதியில் திரளுவதைத் தவிர்க்கவேண்டும்” என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் உள்பட 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. கொரோனா 2-வது அலை இந்தியாவை புரட்டி போட்டு கொண்டிருப்பதால் ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் வெற்றியைக் கொண்டாட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்தது. தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. முன்னிலை விவரங்கள் வெளியிடும் போதும், வெற்றி விவரம் வெளியாகும் போதும், அதனைக் கொண்டாட அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்தது.
திமுக கூட்டணி #வெற்றிமுகம். வெற்றியைக் கொண்டாடுவதென
— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 2, 2021
வீதியில் திரளுவதைத் #தவிர்க்கவேண்டும்.
சனாதனிகளைக் கொட்டமடிக்கவிடாமல்
தேர்தல் களத்தில் தடுத்ததைப்போல,
கொரோனாவும் இங்கே கும்மியடிக்க இடம் கொடுத்துவிடக்கூடாது. #கொரோனா_எச்சரிக்கை#BJP_ஜாக்கிரதை #BeAwareOf_Bjp_and_Corona pic.twitter.com/sHnebvnxTq
இந்நிலையில் தமிழகத்தில் திமுக பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி 153 இடங்களிலும், அதிமுக கூட்டணி 80 இடங்களிலும் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும், முன்னிலை பெற்று வருகிறது. இதனால் திமுக தொண்டர்கள் முன்னிலை அறிவிப்புகள் வர வர திமுக தொண்டர்கள் அறிவாலய வளாகத்திலேயே பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக கூட்டணி வெற்றிமுகம். வெற்றியைக் கொண்டாடுவதென வீதியில் திரளுவதைத் #தவிர்க்கவேண்டும். சனாதனிகளைக் கொட்டமடிக்கவிடாமல் தேர்தல் களத்தில் தடுத்ததைப்போல, கொரோனாவும் இங்கே கும்மியடிக்க இடம் கொடுத்துவிடக்கூடாது” என்று திமுக தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்