Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

திமுகவினரின் கொண்டாட்டத்தை தடுக்க தவறியதாக தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தை தடுக்கத் தவறியதாக தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் உள்பட 5 மாநிலங்களிலும் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. கொரோனா 2-வது அலை இந்தியாவை புரட்டி போட்டு கொண்டிருப்பதால்ல ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் வெற்றியைக் கொண்டாட இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்தது. தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தது.

முன்னிலை விவரங்கள் வெளியிடும் போதும், வெற்றி விவரம் வெளியாகும் போதும், அதனைக் கொண்டாட அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இந்நிலையில் தமிழகத்தில் திமுக பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு வருகின்றன. திமுக கூட்டணி 149 இடங்களிலும், அதிமுக கூட்டணி 84 இடங்களிலும் மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும், முன்னிலை பெற்று வருகிறது. இதனால் திமுக தொண்டர்கள் 100-க்கும் மேற்பட்டோர் தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலய வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னிலை அறிவிப்புகள் வர வர திமுக தொண்டர்கள் அறிவாலய வளாகத்திலேயே பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் ஆணைய தடையை மீறி இவ்வளவு பேர் கூடியதால் கொரோனா அச்சம் அங்கு ஏற்பட்டது. இதனை ஊடகங்கள் மூலமாக தெரிந்து கொண்ட இந்திய தேர்தல் ஆணையம் முன்கூட்டியே அண்ணா அறிவாலயத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததாலும் கூட்டத்தை அப்புறப்படுத்தாதலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததாலும் தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் முரளியை சஸ்பெண்டு செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதையடுத்து அண்ணா அறிவாலய வளாகத்தில் கூடியிருந்த திமுக தொண்டர்களை அறிவாலய ஊழியர்கள் ஒலிபெருக்கி மூலம் கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்