தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி 149 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 84 தொகுதிகளிலும், மநீம ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் பெற்றுள்ள முன்னிலை நிலவரம்.
தஞ்சாவூர் மாவட்டம் (திமுக 6 - அதிமுக 2)
பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவிடைமருதூர், கும்பகோணம், திருவையாறு, தஞ்சாவூர் ஆகிய ஆறு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது திமுக. பாபநாசம் மற்றும் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக முன்னிலை.
திருவாரூர் (திமுக+ 3 - அதிமுக 1)
மன்னார்குடி மற்றும் திருவாரூரில் திமுக முன்னிலை. நன்னிலத்தில் அதிமுகவும், திருத்துறைப்பூண்டியில் கம்யூனிஸ்ட் கட்சியும் முன்னிலை வகிக்கிறது.
நாகை மாவட்டம் (திமுக+ 2, அதிமுக 1)
நாகை தொகுதியில் வி.சி.க முன்னிலை வகிக்கிறது. கீழ்வேளூர் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியும், வேதாரண்யத்தில் அதிமுகவும் முன்னிலை வகிக்கிறது.
அரியலூர் மாவட்டம் (திமுக 2)
அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் என இரண்டு தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் (திமுக+ 2 - அதிமுக 1)
சீர்காழி தொகுதியில் திமுகவும், பூம்புகார் தொகுதியில் அதிமுகவும் முன்னிலை பெற்றுள்ளன. மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை பெற்றுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்