தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்று வருகிறது. மதியம் 1.30 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 146 இடங்களிலும், அதிமுக கூட்டணி 87 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன. கடந்த தேர்தல்களைப் போலவே இந்த தேர்தலிலில் கொங்கு மண்டலத்தில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. கொங்கு மண்டல மாவட்டங்களில் அரசியல் கட்சிகள் பெற்றுள்ள முன்னிலை நிலவரம்.
கோவை மாவட்டம்
சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர் ஆகிய 8 தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக மேட்டுப்பாளையத்திலும், கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் முன்னிலை வகிக்கிறது.
திருப்பூர் மாவட்டம்
உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், அவிநாசி, திருப்பூர் வடக்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவும், காங்கேயம் மற்றும் திருப்பூர் தொகுதிகளில் திமுகவும், தாராபுரத்தில் பாஜகவும் முன்னிலை வகிக்கிறது.
நீலகிரி மாவட்டம்
உதகை பாஜக, கூடலூர் மற்றும் குன்னூரில் அதிமுக முன்னிலை.
ஈரோடு மாவட்டம்
கோபி, பவானிசாகர், பெருந்துறை, பவானி தொகுதிகளில் அதிமுக, ஈரோடு மேற்கு மற்றும் அந்தியூரில் திமுகவும், ஈரோடு கிழக்கில் காங்கிரஸ் மற்றும் மொடக்குறிச்சியில் பாஜக முன்னிலை.
நாமக்கல் மாவட்டம்
ராசிபுரம், பரமத்தி வேலூர், குமாரபாளையம் தொகுதிகளில் அதிமுகவும், சேந்தமங்கலம், நாமக்கல், திருச்செங்கோடு தொகுதியில் திமுகவும் முன்னிலை.
சேலம் மாவட்டம்
சேலம் தெற்கு, வீரபாண்டி, கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், எடப்பாடி தொகுதிகளில் அதிமுகவும், சேலம் மேற்கு மற்றும் மேட்டூரில் பாமகவும், சங்ககிரி, சேலம் வடக்கு தொகுதிகளில் திமுகவும் முன்னிலை வகிக்கிறது.
கரூர் மாவட்டம்
அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய தொகுதிகளில் திமுக முன்னிலையில் உள்ளது. கரூர் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன.
திண்டுக்கல் மாவட்டம்
பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூரில் திமுகவும், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல் தொகுதியில் அதிமுகவும் முன்னிலை வகிக்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்