Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வங்கக்கடலில் வரும் 23-தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு

வங்கக்கடலில் வரும் 23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருவேளை இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக மாறினாலும், தமிழகத்தில் மே இறுதியில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என்பதால் புயல் தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என கணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த வாரம் அரபிக்கடலில் உருவான டவ் தே புயலால் கேரளா, கோவா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்தது. இந்த புயல் நேற்று முன்தினம் இரவு குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் - மாகுவா இடையே கரையை கடந்தது. கடும் புயல் உருவானதால் மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்தது. 190 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்றால் குஜராத்தின் பல பகுதிகள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்