புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்படுவோர் எண்ணிக்கை, இந்தியாவில் சற்று குறைந்து வருகிறது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா உறுதிசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 2,63,533 என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது முந்தைய நாட்களோடு ஒப்பீட்டளவில் குறைவானதாக இருக்கிறது. இந்த எண்ணிக்கையின் மூலம், இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,52,28,996 என உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 4,329 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆறுதல் அளிக்கும் விதமாக 24 மணி நேரத்தில் 4,22,436 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.
முன்னராக, நேற்றைய தினம் பதிவான தரவில், அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் 4,106 பேர் உயிரிழந்திருந்ததாக அறிவிக்கப்பட்டது. இதோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் இன்று இறப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளதை நாம் அறியலாம். இருப்பினும், மே 17ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,81,386 என்றுதான் இருந்தாது. அதை ஒப்பிடுகையில், இன்று புதிதாக கொரோனா கண்டறியப்பட்ட நபர்களின் எண்ணிக்கையைவிட, இது அதிகமாக இருப்பதை நாம் பார்க்கலாம். ஆக, புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, ஓரளவு ஏற்ற இறக்கத்தோடு இருக்கிறது.
இதற்கு முந்தைய நாளில் (மே 16) வெளியிடப்பட்ட அறிக்கையில், அதற்கு முந்தைய 24 மணிநேர கணக்குப்படி கொரோனாவால் புதிதாக 3,11,170 பேர் பாதிக்கப்பட்டனர். இது, ஒப்பீட்டளவில் மே 15 தொற்று பாதிப்பு எண்ணிக்கையைவிட குறைந்திருந்தது. இப்போது இந்த எண்ணிக்கை இன்னும் குறைந்துக்கொண்டே வருகின்றது. புதிதாக தொற்று உறுதிசெய்யப்படுவோர் எண்ணிக்கையானது 3 லட்சம் என்பதிலிருந்து, 2 லட்சம் என குறைந்து உள்ளது என்பதை ஆரோக்கியமான ஒன்றாக பார்க்கலாம்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்படி புதிதாக பாதிப்பு உறுதிசெய்யப்படுபவர்கள் எண்ணிக்கை குறைவது, சற்று ஆறுதல் தரும் விஷயமாக உள்ளது. இந்த இறக்கம், இறப்பவர்கள் எண்ணிக்கையில் சீராக இல்லை என்பது ஏமாற்றம். அதில் பெரும்பாலும் எண்ணிக்கை சீரற்று இருக்கிறதே தவிர, முழுமையாக குறைவதாக தெரியவில்லை. விரைவில் அதுவும் நடக்குமென நம்புவோம்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்