கொரோனாவால் இரு விவசாயிகள் மரணடைந்தனர். எனவே மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான டெல்லி விவசாயிகள் போராட்டத்தை ஒத்திவைக்கவேண்டும் என பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் போலால் சிங் கோரிக்கை வைத்திருக்கிறார்.
பாரதிய கிசான் யூனியன் செய்தித் தொடர்பாளர் போபால் சிங், சிங்கு எல்லையில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு வலியுறுத்தினார். இது தொடர்பாக பேசிய போபால் சிங், " கொரோனா காரணமாக சிங்கு எல்லையில் போராடி வந்த 2 விவசாயிகள் இறந்தனர். விவசாயிகள் இப்படி இறந்து கொண்டே இருந்தால் யார் கிளர்ச்சி செய்வார்கள்? எனவே நாட்டின் நெருக்கடியைப் பார்த்து, நாம் இப்போதைக்கு போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என விவசாயிகளிடம் நான் கோரிக்கை வைக்கிறேன்” எனத் தெரிவித்தார்
மேலும், “ விவசாயிகள் பிழைத்தால்தான் நாம் 'அன்ன தாதா' என்று அழைக்கப்படுவோம். நம் பயிர்களையும் உயிரையும் காப்பாற்ற முடிந்தால் மட்டுமே நாம் அவ்வாறு அழைக்கப்படுவோம். எதிர்காலத்தில் நாம் போராட்டத்தை மேற்கொள்வோம், ஆனால் இப்போது நிலைமை சரியாக இல்லை. இந்த கடினமான காலங்களில் நாம் தேசத்துடன் இருக்க வேண்டும்” எனவும் போபால் சிங் தெரிவித்தார்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்