Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனாவில் இருந்து குணமானவர்களுக்கு 3 மாதங்களுக்கு பிறகே தடுப்பூசி

கொரோனா வைரஸ் பாதித்து குணமடைந்தவர்கள் 3 மாதங்களுக்கு பிறகே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நிபுணர்கள் குழு பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அனுப்பியுள்ளது. அதில், “முதல் டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் 3 மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் செலுத்திக் கொள்ளலாம். வேறு பாதிப்புக்கு உள்ளாகி தீவிர சிகிச்சை பெற்று வருவோர் 4 முதல் 8 வாரங்கள் வரை தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஒத்திவைக்க வேண்டும்.

image

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் 14 நாள்களுக்குப் பிறகு ரத்த தானம் செய்யலாம். பாலூட்டும் தாய்மார்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்