மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 43 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
காணொலி மூலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர். தமிழகம் சார்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்து கொள்கிறார். கூட்டத்தில் ஜிஎஸ்டி வரியின் கீழ் பெட்ரோலிய பொருட்களை சேர்ப்பது உள்ளிட்ட நிலுவையில் இருக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தடுப்பூசிகளுக்கு விதிக்கப்படும் ஐந்து சதவிகித ஜிஎஸ்டியை ரத்து செய்வது, கொரோனா தொடர்பான முக்கிய மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றுக்கு வரிவிலக்கு அளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மாநில அரசுகள் முன்வைக்கும் என தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்