கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 8-ம் தேதி முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மாநிலத்தில் தொற்று கட்டுக்குள் வரவில்லை. தொற்று விகிதம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எனவே ஊரடங்கை 23-ம் தேதி வரை நீட்டிப்பதாக முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று அறிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தொற்று கட்டுக்குள் வராத பகுதிகள் மற்றும் நோயாளிகள் அதிகரிக்கும் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன. எனவே தொற்றின் வீரியத்தை கட்டுப்படுத்தும் வகையில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் 16-ம் தேதி (நாளை) முதல் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது’ என்று தெரிவித்தார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்