Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டவ்-தே புயலால் கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: இந்திய வானிலை மையம்

டவ்-தே புயல் காரணமாக கேரளாவின், எட்டு கடற்கரையோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் டவ்-தே புயல் கரையை கடக்கும் வாய்ப்புள்ளது என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கைக்கு பின்னர், எட்டு மாவட்டங்களுக்கு கேரள அரசு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. டவ்-தே புயல் காரணமாக மீனவர்கள் மே 17 வரை கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது.

டவ்-தே புயல் 'மிகக் கடுமையான' சூறாவளி புயலாக (150-160 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்) தீவிரமடையக்கூடும் என்றும், இதனால் தமிழ்நாடு, கேரளா, கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களின் பல மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்