Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கொரோனா பரவல் அச்சம்: இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியா சென்றால் 5 ஆண்டுகள் சிறை

கொரோனா பரவல் காரணமாக இந்தியாவிலிருந்து திரும்பும் ஆஸ்திரேலியர்களுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது கடுமையான அபராதம் விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா பரவலால், பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான சேவையை ரத்து செய்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவும் இந்தியவுக்கு நேரடி விமான சேவையை ரத்து செய்துள்ளது. இருப்பினும் இந்தியாவிலிருந்து நேரடியாக அல்லாமல், வேறு நாடுகளின் வழியாக பலரும் ஆஸ்திரேலியாவுக்கு செல்வது தெரிய வந்துள்ளது. அண்மையில், ஐ.பி.எல் போட்டியில் விளையாட வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜப்மா, கனே ரிச்சர்ட்சன் ஆகியோர் இந்தியாவிலிருந்து நேரடியாக செல்லாமல், வேறு நாடுகளின் வழியாக ஆஸ்திரேலியாவிற்கு திரும்பியதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவிலிருந்து தங்களது சொந்த நாட்டு மக்களே ஆஸ்திரேலியா திரும்ப அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. ஆஸ்திரேலிய குடிமக்கள் இந்தியாவிலிருந்து வந்தால் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 66ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வருகிற மே 3ஆம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்