60% அரசு அதிகாரிகளே சிறப்பாக செயல்படுகின்றனர் என்று அமைச்சர் நாசர் சாடியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்புப்பணிகளில் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறையினர் பலரும் ஈடுபாட்டுடன் செயல்பட்டுவருகின்றனர். அந்தந்த மாவட்டங்களில் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் நேரடியாகச் சென்று விசாரித்துவருகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் 60 சதவிகிதம் அரசு அதிகாரிகள் மட்டுமே கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்படுவதாகவும், மீதமுள்ள 40 சதவிகிதம் பேர் வேலையே செய்யவில்லை எனவும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கடுமையாக சாடினார். ஆவடியில் நடைபெற்ற கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பேசிய அவர், தொற்றால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோரை மனதில் வைத்துகொண்டு அரசு அதிகாரிகள் பணியாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்