Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தமிழகத்தில் வரும் 6-ஆம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள்... முழு விவரம்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த வரும் 6-ஆம் தேதி முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளன.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வற்ற முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் வரும் 6-ஆம் தேதி புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: 

அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களும் அதிகபட்சம் 50 சதவீதப் பணியாளா்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. பயணியர் ரயில், மெட்ரோ ரயில், தனியாா் பேருந்துகள், அரசுப் பேருந்துகள், வாடகை டாக்சி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பொதுமக்கள் அமா்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு அனுமதியில்லை. இவைதவிர தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்குக் கடைகள், காய்கறி விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

மளிகை, பலசரக்கு, காய்கறிக் கடைகளைத் தவிர்த்து இதர கடைகள் அனைத்தையும் திறக்க தடை விதிக்கப்படுகிறது. மீன் சந்தை, மீன் கடைகள், கோழி, இறைச்சிக் கடைகள் அனைத்தும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க அனுமதியில்லை. அதேசமயம், இதர நாள்களில் காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படலாம்.

image

மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போன்று எந்தத் தடையும் இல்லாமல் செயல்படலாம். அனைத்து உணவகங்களிலும் பாா்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீா் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்படும்.

உள் அரங்குகள், திறந்தவெளியில் சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் இதர விழாக்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. திரையரங்குகள் செயல்படாது.

இறுதி ஊர்வலம் மற்றும் அதைச்சார்ந்த சடங்குகளில் இனி 25 பேருக்கு பதில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி. முழு ஊரடங்கு நாள் உள்பட அனைத்து நாட்களிலும் திருமணா விழாக்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க தொடர்ந்து அனுமதி. 

இந்தப் புதிய கட்டுப்பாடுகள் வரும் 6-ஆம் தேதி தொடங்கி வரும் 20-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்