Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மிரட்டும் கருப்பு பூஞ்சை: நாடு முழுவதும் 7,250 பேருக்கு பாதிப்பு

கருப்பு பூஞ்சை நோயினால் நாட்டில் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள மாநிலங்கள் எவை என்பது குறித்து பார்க்கலாம். 

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் மியுகோர்மைகோசிஸ் (Mucormycosis) எனப்படும் கருப்பு பூஞ்சை என்ற தொற்று தற்போது மக்களிடையே அதிகமாக பரவி வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், ஸ்டீராய்டு மருந்து தொடர்ச்சியாக எடுப்பவர்கள், வயதானவர்கள், நீரிழிவு நோய் பாதிப்பு அதிகளவில் இருப்பவர்கள், கருப்பு பூஞ்சை பாதிப்புக்குள்ளாகக்கூடும் என்கின்றனர் மருத்துவர்கள். 

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு நீண்டநாள் சிகிச்சையில் இருந்தவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்திருப்பார்கள். அந்த வகையில் பார்க்கும்போது, கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று தரவுகள் கூறுகின்றன. அதிலும் கடந்த 2 வாரங்களில் அதிகமானோருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.  இதனால் பல்வேறு மாநிலங்கள் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த தீவிர  நடவடிக்கையை எடுத்து வருகின்றன.

தொடர்ந்து அச்சறுத்தி வருவதால் ராஜஸ்தான், தெலங்கானா, ஹரியானா, ஒடிசா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாநில அரசுகள் இந்த நோயை அறிவிக்கப்பட்ட நோய் பட்டியலில் சேர்த்துள்ளன.  மேலும் அனைத்து மாநில அரசுகளும் கருப்பு பூஞ்சை பாதிப்பை தொற்று நோயாக அறிவிக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.  

இதுவரை இந்தியாவில் 7,250 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் 219 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர் என்றும் 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சை நோய்த் தாக்கத்தினால் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் பதிவாகியுள்ளன. 

குஜராத்தில் 1,163 பாதிப்புகளும் 61 இறப்புகளும் பதிவாகியுள்ளன; மத்தியப்பிரதேசத்தில் 575 பாதிப்புகளும் 31 இறப்புகளும் பதிவாகியுள்ளன. ஹரியானாவில் 268 பாதிப்புகளும் 8 இறப்புகளும் பதிவாகியுள்ளன, டெல்லியில் 203 பாதிப்புகளும் ஒரு இறப்பும் பதிவாகியுள்ளன. உத்தரபிரதேசத்தில், 169 பாதிப்புகளும் 8 எட்டு இறப்புகளும் பதிவாகியுள்ளன. அதன் அண்டை மாநிலமான பீகாரில் 103 பாதிப்புகளும் 2 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

சத்தீஸ்கரில் 101 பாதிப்புகளும்  மற்றும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது, கர்நாடகாவில் 97 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன, உயிரிழப்பு இல்லை. தெலங்கானாவில் 90 பாதிப்புகளும் 10 இறப்புகளும் உள்ளன என்று 'ஹிந்துஸ்தான் டைம்ஸ்' கூறுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்