Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

7 பேர் விடுதலை விவகாரம்: முதல்வர் எழுதிய கடிதத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை - கே.எஸ்.அழகிரி

7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை என தமிழக காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி கூறும்போது, “ குற்றவாளிகள் யாரையும் மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால், இனத்தின் பெயரால் பாகுபாடு பார்க்காதீர்கள். ஒருவருக்கு தண்டனை அளிக்க வேண்டுமென்றாலும் சரி, விடுதலை அளிக்க வேண்டுமென்றாலும் சரி அதனை நீதிமன்றங்கள்தான் செய்ய வேண்டுமே தவிர, அதில் அரசியல் அழுத்தங்கள் கூடாது. இந்த அழுத்தங்கள் சமூகத்தில் பல விரும்பத்தகாத நிகழ்வுகளை  உருவாக்கும். சட்ட ஒழுங்கு இல்லாமல் போகும்” என்று கூறினார்.

image

முன்னதாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக சிறையில் 30 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ விசாராணைக்குழுவும் 7 பேர் விடுதலையில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்று கூறியது. இந்த நிலையில் நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்