கொரோனாவை தொடர்ந்து நாட்டில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 8,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. அதிக பாதிப்பு உள்ள மாநிலங்கள் பட்டியலில் குஜராத் முதலிடத்தில் உள்ளது.
குஜராத் மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோயால் இதுவரை 2,281 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மகாராஷ்ட்ராவில் 2,000 பேரும், ஆந்திராவில் 910 பேரும் கருப்பு பூஞ்சை நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் இந்நோய்க்கு இதுவரை 40 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 23 மாநிலங்களில் கருப்பு பூஞ்சை நோய் தாக்கம் இருப்பதாகவும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை பொறுத்து மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நோய்க்கு இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்