சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் சமூக வலைதளத்தில் சுமார் 10,000 கேரக்டர்களில் பயனர்கள் ட்வீட் செய்யும் புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இது குறித்து கடந்த மாதம் எலான் மஸ்க் பேசியிருந்தார். அப்போது அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
மனதில் பட்ட கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சமூக வலைதளமாக விளங்குகிறது ட்விட்டர் தளம். பயனர்கள் வழக்கமாக இதில் 280 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும். ‘ட்விட்டர் ப்ளூ’ சந்தா கட்டணம் செலுத்தி வரும் பயனர்கள் சுமார் 4,000 கேரக்டர்களில் ட்வீட் செய்ய முடியும். இந்நிலையில், 10,000 கேரக்டர்களில் ட்வீட் செய்யும் புதிய அம்சம் இப்போது அறிமுகமாகி உள்ளது. மேலும், இந்த ட்வீட்டை பதிவு செய்த முதல் 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
0 கருத்துகள்