Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சத்தீஸ்கரை தொடர்ந்து தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் படத்தை நீக்கியது பஞ்சாப் அரசு!

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களுக்கு அளிக்கப்படும் சான்றிதழில் இடம் பெற்றிருந்த பிரதமர் மோடியின் படத்தை நீக்கியுள்ளது பஞ்சாப் அரசு. 

கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் அச்சடிக்கப்பட்ட தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சான்றிதழில் பிரதமர் படம் இடம் பெற்றுள்ளதற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தடுப்பூசி சான்றிதழில் இடம் பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை நீக்கி பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இது தொடர்பாக பஞ்சாப் மாநில அரசு அளித்துள்ள விளக்கத்தில், ‘கோவின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கப்படும் தடுப்பூசி சான்றிதழில்தான் பிரதமர் படம் இடம் பெற்றுள்ளது. நாங்கள் அந்த இணையதள சான்றிதழை வழங்காமல், பஞ்சாப் மாநிலத்துக்காக தனியாக உருவாக்கப்பட்ட இணையதளத்தில் இருந்து தடுப்பூசி செலுத்துவோருக்கு சான்றிதழ் வழங்குகிறோம். அதில் யாருடைய படமும் இடம் பெறவில்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகளும் ஏற்கெனவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது,. மேலும், ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ள பீகார் மாநிலத்திலும் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் படம் இடம் பெற்றுள்ளதற்கு எதிா்ப்பு எழுந்துள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்