Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டோமினிகா நாட்டில் மெஹூல் சோக்சி கைது

பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டு வழக்கில் இந்தியாவில் இருந்து தப்பி வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த தொழிலதிபர் மெஹூல் சோக்சியை டோமினிகா நாட்டு போலீஸார் கைது செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மும்பையில் வைர விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வந்த மெஹுல் சோக்சி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 12 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடியில் ஈடுபட்டார். இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டதால், மேற்கிந்திய தீவான, ஆன்டிகுவாவுக்கு சோக்சி தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது. இந்நிலையில், மெஹூல் சோக்சி ஆன்டிகுவாவில் இருந்து மாயமாகி உள்ளதாக தகவல் வெளியானது.

மேலும் முதல் கட்ட விசாரணையில் ஆன்டிகுவாவில் இருந்து தப்பி அவர் கியூபா சென்றதாக கூறப்பட்டது. இதையடுத்து சோக்சியை ஆன்டிகுவா போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் டோமினிகா நாட்டின் போலீஸாரிடம் சிக்கியுள்ளதாக தெரிய வந்தது. இதனையடுத்து மெஹூல் சோக்சியை ஆன்டிகுவா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் சோக்சியை விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சி.பி.ஐ., அமலாக்கத்துறையிடம் ஆன்டிகுவா அரசு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்