துபாய்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இறுதிப் போட்டியில் 76 ரன்கள் விளாசி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதில் முக்கிய பங்கு வகித்த கேப்டன் ரோஹித் சர்மா 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். அதேவேளையில் இந்திய அணியின் மற்றொரு தொடக்க பேட்ஸ்மேனான ஷுப்மன் கில் முதலிடத்தில் தொடர்கிறார்.
இந்திய நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி ஒரு இடத்தை இழந்து 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ஸ்ரேயஸ் ஐர் 8-வது இடத்தில் தொடர்கிறார். நியூஸிலாந்தின் டேரில் மிட்செல் ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தையும், ரச்சின் ரவீந்திரா 14 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தையும், கிளென் பிலிப்ஸ் 6 இடங்கள் முன்னேறி 24-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
0 கருத்துகள்