Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த பரிசீலனை - முதல்வர் மு.க. ஸ்டாலின்

அனைத்துக்கட்சி எம்.எல்.ஏக்களுடன் நடந்த இந்தக் கூட்டத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்த பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவ வல்லுநர்கள் குழுவுடன் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து, அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் குழுவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், தவாக சார்பில் வேல்முருகன், மமக சார்பில் ஜவாஹிருல்லா, கொமதேக சார்பில் ஈஸ்வரன், திமுக சார்பில் எழிலன், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், புரட்சி பாரதம் சார்பில் ஜெகன்மூர்த்தி, சிபிஐ சார்பில் தளி ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் சார்பில் நாகை மாலி, பாஜக சார்பில் ஜி.கே மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதில் பேசிய முதல்வர், தமிழகத்தில் கொரோனா பரவல் சங்கிலியை உடைப்பதற்காகவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சிலர் கொரோனா விதிகளை மதிக்காமல், விடுமுறை என நினைத்து ஊர்சுற்றுகின்றனர் என வேதனை தெரிவித்தார். மேலும் கொரோனா குறித்த பயம் மக்களின் பேச்சில் தெரிகிறது. ஆனால் செயலில் இல்லை எனவும் அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தினால்தான் கொரோனாவை குறைக்கமுடியும் என கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் தளர்வுகளே இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலனை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்