கடந்த நிதி ஆண்டில் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ.2,227 டாலராக இருக்கிறது. ஆனால், இந்தியாவின் தனிநபர் வருமானம் 280 டாலர் அளவுக்கு குறைந்து 1,947 டாலராக இருக்கிறது. கொரோனா காரணாமாக நாடு தழுவிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவின் தனிநபர் வருமானம் சரிந்திருக்கிறது.
இதற்கு முந்தைய நிதி ஆண்டில் (2020-ம் நிதி ஆண்டில்) வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் 2,064 டாலராக இருந்தது. ஒரு நிதி ஆண்டில் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் 9 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இது தொடர்பான கணிப்பை ஐ.எம்.எப் வெளியிட்டிருந்து. அதில், டாலர் அடிப்படையில் இந்தியாவின் தனிநபர் வருமானத்தை விட வங்கதேசத்தின் வருமானம் உயரும் என ஐ.எம்.எப். கூறியிருந்தது.
2007-ம் ஆண்டு இந்தியாவின் தனிநபர் வருமானத்தை விட வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் பாதியாக இருந்தது நினைவுகூரத்தக்கது.
வங்கதேசத்தில் வேலைக்கு செல்வதில் பெண்களின் பங்களிப்பு 37 சதவீதமாக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் 21 சதவீதமாக இருக்கிறது. தனிநபர் வருமானம் உயர்வதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். தவிர, இந்த பெருதொற்று காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் எதிர்மறையில் இருந்தது. ஆனால், வங்கதேசத்தின் வளர்ச்சி குறைந்தாலும் எதிர்மறையில் செல்லவில்லை.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்