புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமுள்ள 30 தொகுதிளில் 16 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி.
ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் 81.7 சதவீத வாக்குகள் பதிவாகின. 24 நாட்களுக்குப் பின் 6 மையங்களில் நேற்று காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. அதன் முடிவில், என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்கள், பாஜக 6 இடங்கள் என ஆட்சியமைக்கத் தேவையான 16 இடங்களில் அக்கூட்டணி வெற்றி பெற்றது.
இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 2 இடங்களிலும், திமுக 6 இடங்களிலும் வெற்றி பெற்றன. மேலும், புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை 6 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர்.
இதனிடையே, போட்டியிட்ட 5 இடங்களிலும் தோல்வியை தழுவியது அதிமுக. 1980-க்கு பிறகு 40 ஆண்டுகள் கழித்து, பேரவையில் அதிமுக இடம்பெற முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்