Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தடுப்பூசிக்கான பக்கவிளைவுகளை கையாள இந்தியா திணறக் கூடும்: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி

இந்தியாவில் பைசர் மற்றும் மாடர்னா நிறுவங்களின் தடுப்பூசிகள் விரைவில் வரவிருக்கும் நிலையில், அதுபற்றிய ஆய்வுகளை துரிதப்படுத்தி வருகிறது உலக சுகாதார நிறுவனம். அந்த வகையில், உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவக் குழு, இந்தத் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, சிலருக்கு மையோகார்டிடிஸ் பாதிப்பு ஏற்படுவதை கண்டறிந்துள்ளனர். இதுபற்றி மேலும் அவர்கள் ஆய்வு செய்துவருகின்றனர்.

மையோகார்டிடிஸ் என்பது இதயத்தின் தசைகளில் ஏற்படும் ஒருவகை அழற்சி. எரிகாடிடிஸ் என்பது, இதயத்தை சுற்றியுள்ள பிற பகுதிகளில் ஏற்படும் அழற்சி. இவை இரண்டுமே தீவிர சிக்கல்களை ஏற்படுத்தும் என்றாலும்கூட, இவற்றுக்கு சிகிச்சைகள் உண்டு, குணப்படுத்த முடியும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

உலக சுகாதாரம் அமைப்பின் குழுவினர் இதுபற்றி பேசுகையில், மையோகார்டிடிஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களை அதிலிருந்து மீட்டுவிடலாம் என கூறியுள்ளனர். மேற்கொண்டும் அவர்களின் உடல்நலன் கண்காணிப்புக்கு உட்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. பெரும்பாலும் இந்த பக்கவிளைவு இளைஞர்களுக்கு மட்டுமே ஏற்படுவதாகவும், அதிலும் பெண்களைவிட ஆண்களுக்கே அதிகம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

image

இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டு, 4 நாள்களுக்கு பிறகே இவ்வகை ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் மிக மிக மிதமான பாதிப்பே இந்த பக்கவிளைவில் ஏற்படுகிறது என சொல்லப்படுகிறது.

இந்த பக்கவிளைவுகள் பற்றியும், இது எத்தனை சதவிகிதம் பேருக்கு ஏற்படுகிறது – தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படுகின்றன – அவற்றோடு ஒப்பிடுகையில் இந்த பாதிப்பு எந்தளவுக்கு ஏற்படுகிறது என்பது பற்றி மேற்கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

image

இந்தியாவில் ஏற்கெனவே கொரோனா தடுப்பூசி குறைவாக விநியோகிக்கப்பட்டுவரும் நிலையில், இப்படியான பக்கவிளைவுகள் ஏற்பட்டால் சிக்கல் அதிகமாகும் என கணிக்கின்றனர் ஆய்வாளர்கள்.

“இந்தியாவில் கிராமப்புரங்களில் மருத்துவ வசதிகளும் கட்டமைப்புகள் போதியளவில் இல்லாததால், கொரோனா தடுப்பூசிக்கு பின் வரும் பக்கவிளைவுகளை கையாள்வதில் சிக்கல் ஏற்படும்” என்று கூறியுள்ளார் விஞ்ஞானியும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் தொற்றுநோயியல் தலைவருமான மருத்துவர் லலித் காந்த்.

தகவல் உறுதுணை: Mint

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்