தடுப்பூசிக்காக மாதக்கணக்கில் மக்கள் காத்திருக்கிறார்கள், பிரதமரின் 30 நிமிட காத்திருப்புக்கு iவம்பா? என ஆய்வுக்கூட்டத்தை மம்தா பானர்ஜி தவிர்த்த விவகாரத்தில் திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ரா பதிலளித்திருக்கிறார்.
யாஸ் புயல் சேதம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி உடனான ஆய்வுக்கூட்டத்தை மம்தா பானர்ஜி தவிர்த்ததற்காக பாஜக அமைச்சர்கள் மற்றும் பாஜக முதல்வர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் மோடியை காத்திருக்கச் செய்ததற்காக மம்தாவை பாஜக விமர்சித்து வருவதற்கு பதிலளித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா " பிரதமரின் 30 நிமிட காத்திருப்புக்கு ஏன் இவ்வளவு வம்பு?. இந்தியர்கள் 7 ஆண்டுகளாக 15 இலட்ச ரூபாய்க்கு காத்திருக்கிறார்கள், ஏடிஎம் வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்தார்கள், தடுப்பூசிக்காக மாதக்கணக்கில் காத்திருக்கிறார்கள் " என்று ட்வீட் செய்திருக்கிறார்.
மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், தேபஸ்ரீ சவுத்ரி, ஆளுநர் ஜகதீப் தங்கர் மற்றும் மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து ஆதிகாரி ஆகியோர் கலந்து கொண்ட ஆய்வுக் கூட்டத்தில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு பிரதமர் மோடியின் அனுமதியைப் பெற்றதாக மம்தா பானர்ஜி கூறினார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்