Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

விரைவுச் செய்திகள்: தடுப்பூசி மையம் | குமரியில் தொடர் மழை வெள்ளம் | வங்கி மோசடி

கோவை, திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா பரவல் குறையவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். போதிய படுக்கை வசதிகள் இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

தடுப்பூசி தயாரிப்பு மையத்தை குத்தகைக்கு தாருங்கள்: செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்தை தமிழகத்திற்கு , மத்திய அரசு குத்தகைக்கு விட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தடுப்பூசி மையம் - ஒரு வாரத்தில் முடிவு: செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த பின்னர் டி. ஆர். பாலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளனர்.

பேச்சு சுதந்திரத்திற்கு அபாயம் - டிவிட்டர்: இந்தியாவில் தங்கள் சேவையை பயன்படுத்தும் மக்களின் பேச்சு சுதந்திரத்திற்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக ட்விட்டர் கவலை தெரிவித்துள்ளது. காங்கிரஸ் ’டூல்கிட்’ விவகாரத்தில் ட்விட்டர் நிறுவன அலுவலகத்திற்கு சென்று டெல்லி காவல்துறையினர் நோட்டீஸ் அளித்திருந்த நிலையில் இவ்வாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பருப்பு டெண்டருக்கு தடை - அரசு மேல்முறையீடு: பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டருக்கு உயர்நீதிமன்ற கிளை தடைவிதித்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மனுவாக தாக்கல் செய்தபிறகு விசாரணை நடத்துவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

குடியிருப்புப் பகுதிகள், சாலைகள் நீரில் மூழ்கின: கன்னியாகுமரியில் மூன்றாவது நாளாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதனால்
குடியிருப்புப் பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிப்பதுடன், சாலைகளும் நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

திற்பரப்பு அருவியை மூழ்கடித்த வெள்ளம்: தொடர் மழையால் திற்பரப்பு நீர்வீழ்ச்சியை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கோதையாறு, தாமிரபரணியிலும் வெள்ளநீர் பாய்ந்தோடுகிறது.

தடுப்பூசி போட திரண்ட இளைஞர்கள்: சேலம், மதுரையில் தடுப்பூசி போட ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் திரண்டனர். அங்கு தனிமனித இடைவெளி பின்பற்றப்படாததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

கருப்பு பூஞ்சை - ஆம்போடெரிசின் மருந்து ரூ.1200: கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின் மருந்தின் விலை 1,200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்தா நிறுவனம் தயாரிக்கும் மருந்து திங்கள்கிழமை முதல் விற்பனைக்கு வருகிறது.

தமிழில் பொறியியல் கல்வி - ஏஐசிடிஇ: தமிழ் உள்ளிட்ட 7 மொழிகளில் பொறியியல் கல்வி வழங்க அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி போடுவது அதிகரிப்பு: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவது அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 2 லட்சத்து 64 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

கொரோனாவுக்கு ஒரே நாளில் 3,847 பேர் பலி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவுக்கு 3,847 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரே நாளில் 2,11,000 பேர் தொற்றால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

கொரோனா மருந்து 2DG விற்பனைக்கு வந்தது: தண்ணீரில் கலந்து குடிக்கும் கொரோனா மருந்து சந்தைகளில் விற்பனைக்கு வந்தது. 10 ஆயிரம் பாக்கெட் மருந்துகள் சந்தைகளில் கிடைக்கும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.

வங்கிக் கணக்கில் இருந்து ரூ.53 லட்சம் திருட்டு: சென்னையில் ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து 53 லட்சம் ரூபாய் திருடு போயுள்ளது. போலியான தொலைபேசி அழைப்பு மூலம் செல்போனுக்கு வந்த ஓடிபி எண்ணை கேட்டு இந்த மோசடி நடத்தப்பட்டுள்ளது.

டொமினிகா நாட்டில் சிக்கினார் மெகுல் சோக்சி: 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த வைர வியாபாரி மெகுல் சோக்சி டொமினிகா நாட்டில் சிக்கினார்.

அமெரிக்க அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் இன்று பேச்சு: அமெரிக்க அமைச்சர்களுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாஷிங்டனில் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். பைடன் அரசு அமைந்தபின் முக்கியத்துவம் பெறும் இந்திய அமைச்சரின் முதல் சந்திப்பு இதுவேயாகும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்