Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வீணடிப்பில் தமிழகத்துக்கு மூன்றாவது இடம்

கொரோனா தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டதில் தமிழகம் மூன்றாவது இடத்தில்  உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 15.5 சதவிகிதம் தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டிருக்கிறது. தடுப்பூசி வீணடிப்பில் முதல் இரண்டு இடங்களில் ஜார்க்கண்ட் , சத்தீஸ்கர் மாநிலங்கள் உள்ளன. இதில், ஜார்க்கண்ட்டில் 30.2 சதவிகிதம் தடுப்பூசிகளும், சத்தீஸ்கரில் 37.3 சதவிகிதம் தடுப்பூசிகளும் வீணடிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு இந்திய அளவிலும், தமிழக அளவிலும் குறைந்து வருகிறது. பாதிப்பு குறைந்ததற்கு, ஊரடங்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இதை குறிப்பிட்டு, ‘ஊரடங்கின் பலனை நம்மால் காண முடிகிறது’ என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் ஊரடங்கு மட்டுமே கொரோனா கட்டுப்படுத்தலை நிறுத்திவிடாது. ஊரடங்கு, தற்காலிக தீர்வு மட்டுமே. நிரந்தர தீர்வுக்கு, தடுப்பூசி கட்டாயம். இதை வலியுறுத்தி மாநில அரசு பல்வேறு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது. இருப்பினும் மக்கள் பலருக்கும் தடுப்பூசி சார்ந்த மனத்தடை அப்படியே இருக்கிறது என்பதும் மறுப்பதற்கில்லை. தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காதபட்சத்தில், மீண்டும் மீண்டும் அரசு ஊரடங்கையே நாடவேண்டியிருக்கும்.

image

ஊரடங்கு என்பது, பொருளாதார ரீதியாக மாநிலத்தை பாதிக்கும் என்பதால் தடுப்பூசிக்கான விழிப்புணர்வு அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. அரசின் இந்த முயற்சிகள் ஆரோக்கியமாக பார்க்கப்படும் இதேவேளையில், தடுப்பூசிகளை முறையாக கையாளாமல், வீணடிக்கும் செயல்களும் தமிழகத்தில் நடந்து வருகிறது.

இந்தியாவில் மே 1 ம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசியை பொறுத்தவரையில்,  ஒரு தடுப்பு மருந்து செட்டை  திறக்கும்பட்சத்தில், அதிலுள்ள குப்பிகளை பத்து பேருக்காவது செலுத்தவேண்டும். இல்லையென்றால், மீதமிருக்கும் மருந்து வீணாகிவிடும். அதை மேற்கொண்டு பயன்படுத்த முடியாமல் போகும். அப்படி வீணடிக்கப்படும் – பயன்படுத்த முடியாமல் போகும் தடுப்பூசிகளின் எண்ணிக்கைகளை இந்திய அளவில் ஆராய்ந்தபோது, அந்த பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது தெரியவந்துள்ளது. இதுபற்றிய தரவுகளை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்