ரெம்டெசிவிர் மருந்து விற்பனையில் திட்டமிடல் இல்லாததால் போலீசார் மக்களை கட்டுப்படுத்துவதில் சிரமங்களை மேற்கொண்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை நடைபெற்று வந்தது. ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக இன்றிலிருந்து நேரு விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை இருக்கும் என சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. மேலும் ஒரு நாளைக்கு 300 பேருக்கு மட்டுமே மருந்து வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் நேரு விளையாட்டு அரங்கில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை தொடங்கியுள்ளது.
இதனால் இன்று அங்கு கூட்டம் அலைமோதியது. ஏராளமானோர் முண்டியடித்துக்கொண்டு மருந்து வாங்க சென்றனர். போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். மருந்து வழங்குவதில் தெளிவான திட்டமிடல் இல்லாததால் இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்