ரெம்டெசிவிர், ஆக்சிஜனை பதுக்கி கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, கொரோனா 2 வது அலையின் தாக்கம் தமிழகத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 32 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், நேற்று முதியவர்கள் உட்பட 288 பேர் உயிரிழந்தனர். இதனிடையே கொரோனாத் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டெசிவிர் மருந்தை மருத்துவர்கள் உட்பட பலர் அதிகவிலைக்கு கள்ளச்சந்தையில் விற்று வருவதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்